Friday, 29 August 2014

மூத்த பதிவா் கேபிள் சங்கா் சாருடன் நான்


Monday, 21 July 2014

28 ஆண்டுகளாக காத்திருந்த வெற்றி


இஷாந்த் சர்மா - “ இவன ஏண்டா பவுலிங் போட கூப்பட்றானுங்க மேட்ச சீக்கிரம் போட்டு குடுத்து முடிச்சி வெச்சிடுவானே ” - அப்படின்னு இவருக்கு பவுலிங் குடுத்தாலே முதல்ல சொல்லுவாங்க

                           ஆனா இன்னிக்கும் அப்படித்தான் மேட்ச சீக்கிரமா முடிச்சி குடுத்துட்டாரு - ஆமா வெற்றியோட....

                                         வாழ்த்துக்கள் - இஷாந்த் - 28 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற வெற்றி மட்டுமல்லாது - இதுவரை எந்த வெளிநாட்டு பவுலரும் லார்ட்ஸ் மைதானத்தில் செய்யாத சாதனையை செய்தமைக்கும்

Dawn of the Planet of the Apes - சினிமா விமர்சனம்


கொமாரபாளையம் கௌரி தியேட்டர் 11.7.14 ரிலீஸ்

                            நம் எம்.ஜி.ஆர் பட கதைதான் அதை இன்றைய நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப்ப மாற்றி புதிய விருந்து படைத்திருக்கிறார்கள்

                           மனித குலம் வைரஸ் நோயாள் பாதிக்கப்பட்டு அழிந்து கொண்டிருக்கும் பொழுது அதில் தப்பி பிழைத்தவர்கள் ஓர் இடத்திலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காட்டில் போன பாகத்தில் தப்பி சென்ற சீசர் அவனது குடும்பம் மற்றும் அவனது கூட்டாளிகள் அனைவரும் உள்ளனர்.

                           அந்த காட்டிற்குள் இருக்கும் ஓர் அணையில்தான் மின்சாரம் தயாரிக்கும் இடம் இறுக்கிறது. அதை இயங்க செய்தால்தான் நகருக்குள் இருக்கும் மனிதர்களுக்கு மின்சாரம் கிடைக்கும்.

                        அதற்காக கதாநாயகன் காட்டிற்குள் சென்று சீசரிடம் பேசி சம்மதம் வாங்கி அந்த அணையை இயக்கும் வேளையை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆரம்பிக்கிறான்.

                        சீசரின இந்த செயலை வெறுக்கும் அவனது கூட்டாளி கோபா நகருக்குள் சென்று துப்பாக்கி ஒன்றை கைப்பற்றி அதை வைத்து சீசரை சுட்டுவிட்டு மனிதர்கள் தான் சுட்டார்கள் நாம் அவர்களை பழித்தீர்ப்போம் என்று மற்று ஏப்ஸ்களை துாண்டிவிட்டு நகரத்துக்குள் நுழைந்து மனிதர்களை கொன்று வேட்டையாடி மீதி இருக்கும் மனிதர்களை சிறைப்பிடிக்கிறது.

                         இந்நிலையில் கதாநாயகனால் உயிர் பிழைத்த சீசர் நகரத்திற்குள் வந்த தனது நயவஞ்சக கூட்டாளி கோபாவை கொன்று மீண்டும் தனது கூட்டத்திற்கு தலைமை ஏற்று எப்படி அவர்களை நல்வழி படுத்துகிறான் என்பதே டான ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் ன் கதை

                            மிகப் பொருட் செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த திரைப்படம் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவரும் வகையில் உள்ளது.

சதுரங்க வேட்டை சினிமா விமர்சனம்

கொமாரபாளையம் லட்சுமி தியேட்டரில் ரீலீஸ் 18-07-2014

கோலிசோடா படத்தில் உதிவி இயக்குநராக பணிபுரிந்த வினோத் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயாகனாக நட்ராஜ்(நட்டி) அவர்களும் கதாநாயகியாக மலையாள வரவு இஷாராவும் மற்றும் இளவரசு, வளவன், பொண்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர், நடிகர் மனோ பாலா அவாகள் தயாரித்திருக்கிறார். டைரக்டர் லிங்குசாமி அவர்கள் தனது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் படத்தை வாங்கி விநியோகம் செய்துள்ளார்.

கதை - சமீபத்தில் நாம் பத்திரிக்கையில் படித்து படித்தும் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டிருக்கிற பல வகையான மோசடிகள் எவ்வாறு செய்கிறார்கள் அதை செய்யும் ஹீரோ அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் அவனால் ஏமாந்தவர்கள் அவனை என்ன செய்தார்கள் அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே கதை.

திரைக்கதை - 6 வகையான மோசடி அதன் தலப்பிலேயே பின்னப்பட்ட திரைக்கதை என படம் ஜிவ்வென்று ஸ்பீடு எடுத்து பறக்கிறது. MLM பிஸ்னஸ் பற்றி வரும் காட்சிகளில் அதைப்பற்றி தெரிந்தவர்கள் தட்டும் கைத்தட்டலை விட அதில் சேர்ந்து ஏமாந்தவர்கள் தட்டும் கைத்தட்டுகளே அதிகம்  கேட்கிறது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல் கடையில் அந்த ரைஸ் புல்லிங் மோசடி காட்சிகள் அருமை

வசனம் - “ நான் ஜனங்கள ஏமாத்தள ஏமாற தயார இருந்தவங்களுக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுத்தேன் அவங்வளவுதான் இதை போய் மோசடின்னு சொல்றீங்களே ” - “ ஒருத்தன் நம்பள ஏமாத்திட்ட அவன நாம எதிரியா பாக்க கூடாது அவனை நாம நம்ம குருவா நினைச்சி வாழ்கையில முன்னேற்ற வழிய மட்டும்தான் பாக்கனும் ” என்று படம் முழுவதும் வசனங்கள் பட்டாசாய் வெடிக்கின்றன

இயக்கம் - முதல் பட இயக்குநருக்குண்டா ஜெயிக் வேண்டும் என்ற வெறி வினோத்தி்டம் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் ஆராய்ந்து அதை காட்சிப் படுத்திய விதத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

நட்ராஜ் - அசால்டா இவர் செய்த கேரக்டர் படத்தின் ஜீவநாடியே இவர் நடிப்பில் துக்கி நிறுத்திவிட்டார்

வெற்றி பயணத்துடன் தொடங்கியிருக்கும் டைரக்டர் வினோத்திற்கும் தயாரிப்பாளர் மனோ பாலாவிற்கும் வாழ்த்துக்கள்