Friday, 29 August 2014

மூத்த பதிவா் கேபிள் சங்கா் சாருடன் நான்


Monday, 21 July 2014

28 ஆண்டுகளாக காத்திருந்த வெற்றி


இஷாந்த் சர்மா - “ இவன ஏண்டா பவுலிங் போட கூப்பட்றானுங்க மேட்ச சீக்கிரம் போட்டு குடுத்து முடிச்சி வெச்சிடுவானே ” - அப்படின்னு இவருக்கு பவுலிங் குடுத்தாலே முதல்ல சொல்லுவாங்க

                           ஆனா இன்னிக்கும் அப்படித்தான் மேட்ச சீக்கிரமா முடிச்சி குடுத்துட்டாரு - ஆமா வெற்றியோட....

                                         வாழ்த்துக்கள் - இஷாந்த் - 28 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற வெற்றி மட்டுமல்லாது - இதுவரை எந்த வெளிநாட்டு பவுலரும் லார்ட்ஸ் மைதானத்தில் செய்யாத சாதனையை செய்தமைக்கும்

Dawn of the Planet of the Apes - சினிமா விமர்சனம்


கொமாரபாளையம் கௌரி தியேட்டர் 11.7.14 ரிலீஸ்

                            நம் எம்.ஜி.ஆர் பட கதைதான் அதை இன்றைய நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப்ப மாற்றி புதிய விருந்து படைத்திருக்கிறார்கள்

                           மனித குலம் வைரஸ் நோயாள் பாதிக்கப்பட்டு அழிந்து கொண்டிருக்கும் பொழுது அதில் தப்பி பிழைத்தவர்கள் ஓர் இடத்திலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காட்டில் போன பாகத்தில் தப்பி சென்ற சீசர் அவனது குடும்பம் மற்றும் அவனது கூட்டாளிகள் அனைவரும் உள்ளனர்.

                           அந்த காட்டிற்குள் இருக்கும் ஓர் அணையில்தான் மின்சாரம் தயாரிக்கும் இடம் இறுக்கிறது. அதை இயங்க செய்தால்தான் நகருக்குள் இருக்கும் மனிதர்களுக்கு மின்சாரம் கிடைக்கும்.

                        அதற்காக கதாநாயகன் காட்டிற்குள் சென்று சீசரிடம் பேசி சம்மதம் வாங்கி அந்த அணையை இயக்கும் வேளையை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆரம்பிக்கிறான்.

                        சீசரின இந்த செயலை வெறுக்கும் அவனது கூட்டாளி கோபா நகருக்குள் சென்று துப்பாக்கி ஒன்றை கைப்பற்றி அதை வைத்து சீசரை சுட்டுவிட்டு மனிதர்கள் தான் சுட்டார்கள் நாம் அவர்களை பழித்தீர்ப்போம் என்று மற்று ஏப்ஸ்களை துாண்டிவிட்டு நகரத்துக்குள் நுழைந்து மனிதர்களை கொன்று வேட்டையாடி மீதி இருக்கும் மனிதர்களை சிறைப்பிடிக்கிறது.

                         இந்நிலையில் கதாநாயகனால் உயிர் பிழைத்த சீசர் நகரத்திற்குள் வந்த தனது நயவஞ்சக கூட்டாளி கோபாவை கொன்று மீண்டும் தனது கூட்டத்திற்கு தலைமை ஏற்று எப்படி அவர்களை நல்வழி படுத்துகிறான் என்பதே டான ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் ன் கதை

                            மிகப் பொருட் செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த திரைப்படம் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவரும் வகையில் உள்ளது.

சதுரங்க வேட்டை சினிமா விமர்சனம்

கொமாரபாளையம் லட்சுமி தியேட்டரில் ரீலீஸ் 18-07-2014

கோலிசோடா படத்தில் உதிவி இயக்குநராக பணிபுரிந்த வினோத் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயாகனாக நட்ராஜ்(நட்டி) அவர்களும் கதாநாயகியாக மலையாள வரவு இஷாராவும் மற்றும் இளவரசு, வளவன், பொண்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர், நடிகர் மனோ பாலா அவாகள் தயாரித்திருக்கிறார். டைரக்டர் லிங்குசாமி அவர்கள் தனது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் படத்தை வாங்கி விநியோகம் செய்துள்ளார்.

கதை - சமீபத்தில் நாம் பத்திரிக்கையில் படித்து படித்தும் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டிருக்கிற பல வகையான மோசடிகள் எவ்வாறு செய்கிறார்கள் அதை செய்யும் ஹீரோ அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் அவனால் ஏமாந்தவர்கள் அவனை என்ன செய்தார்கள் அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே கதை.

திரைக்கதை - 6 வகையான மோசடி அதன் தலப்பிலேயே பின்னப்பட்ட திரைக்கதை என படம் ஜிவ்வென்று ஸ்பீடு எடுத்து பறக்கிறது. MLM பிஸ்னஸ் பற்றி வரும் காட்சிகளில் அதைப்பற்றி தெரிந்தவர்கள் தட்டும் கைத்தட்டலை விட அதில் சேர்ந்து ஏமாந்தவர்கள் தட்டும் கைத்தட்டுகளே அதிகம்  கேட்கிறது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல் கடையில் அந்த ரைஸ் புல்லிங் மோசடி காட்சிகள் அருமை

வசனம் - “ நான் ஜனங்கள ஏமாத்தள ஏமாற தயார இருந்தவங்களுக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுத்தேன் அவங்வளவுதான் இதை போய் மோசடின்னு சொல்றீங்களே ” - “ ஒருத்தன் நம்பள ஏமாத்திட்ட அவன நாம எதிரியா பாக்க கூடாது அவனை நாம நம்ம குருவா நினைச்சி வாழ்கையில முன்னேற்ற வழிய மட்டும்தான் பாக்கனும் ” என்று படம் முழுவதும் வசனங்கள் பட்டாசாய் வெடிக்கின்றன

இயக்கம் - முதல் பட இயக்குநருக்குண்டா ஜெயிக் வேண்டும் என்ற வெறி வினோத்தி்டம் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் ஆராய்ந்து அதை காட்சிப் படுத்திய விதத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

நட்ராஜ் - அசால்டா இவர் செய்த கேரக்டர் படத்தின் ஜீவநாடியே இவர் நடிப்பில் துக்கி நிறுத்திவிட்டார்

வெற்றி பயணத்துடன் தொடங்கியிருக்கும் டைரக்டர் வினோத்திற்கும் தயாரிப்பாளர் மனோ பாலாவிற்கும் வாழ்த்துக்கள்

Tuesday, 8 October 2013

சந்தானம் ஜோக்ஸ்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புது படத்தில் வில்லனும் சந்தானமும் சந்தித்து கொள்ளும் காட்சிகளில் வசனம் எப்படி இருக்கும் :
வில்லன் : உன்ன மாதிரி கத்து குட்டி கிட்டலாம் நான் பேச முடியாது
சந்தானம் : இரண்டு கேரளா குட்டிகள அனுப்பி வெக்கறேன் அது கூட பேசுரியா ?
வில்லன் : சிங்கத்த அதோட குகையிலயே சந்திக்க உனக்கு என்ன தைரியம் ?
சந்தானம் : சிங்கமா அசிங்கமா வாயில வந்துட போகுது என்னது குகையா 24 டாஸ்மாக்லயே ஒக்காந்து தண்ணி போட்டுகிட்டு இருக்குற அதுக்குள்ள வர்றதுக்கு எதுக்குடா தைரியம் ?
வில்லன் : உனன காலி பண்ணாம விடமாட்டேன்
சந்தானம் : எனக்கு வேற வீட்ட நீயே பாத்து வெச்சிட்டு வந்து காலி பண்ணு
வில்லன் : டேய் அவன புடிங்கடா
சந்தானம் : ஆல் அல்ல கையிஸ் வெயிட் உங்க எல்லாத்துகும் குவாட்டர் வாங்கி இந்த பேகுல வெச்சிருக்கேன் இதை புடிங்க முதல்ல
அல்ல கைஸ் : தாங்ஸ் பா
வில்லன் : எங்க போனாலும் உன்ன சும்மா விடமாட்டன்டா
சந்தானம் : ஏன் நான் எங்க போனாலும் என் நெம்பருக்கு தீர தீர ரீசார்ஜ் பண்ணிவிடுவியா

Tuesday, 24 September 2013

தத்து பித்துவங்கள்

கட்டயில போரவனே என்று யாரையும் திட்ட வேண்டாம் ஏனென்றால் பெரும்பாலும் இப்பொழுது ஆம்புலன்ஸ்தான்
உன் தலையில இடி விழ என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் பெரும்பாலும் இடி டைரக்டாக தலைமேல் விழாது
உன் நெஞ்சுல இருக்கிற மஞ்சா சோத்த எடுத்துறுவண்டா என்று யாரையும் திட்ட வேண்டாம் சோறு வயிற்றுக்குள்தான் இருக்கும்
உனக்கெல்லாம் நல்ல சாவே வராது என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் சாவில் ஏது நல்லது
உனக்கு இனிமே ஏழரை தாண்டா என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் திட்டும்போது மணி 10.30 ஆக கூட இருக்கலாம்
ஏண்டா லேட்டு என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஒரு நாள் நீங்களும் லேட்டாக வரும் நாள் வரும்
மடப்பய மவனே என்று பையனை திட்ட வேண்டாம்
ஏனென்றால் முதல் சொல் உங்களையே குறிக்கும்
வாய மூடிகிட்டு சாப்பிடு என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் வாயை மூடினால் சாப்பிட முடியாது செஞ்ச சாப்பாடு வீணாகும்
நீயெல்லாம் எங்கடா உருப்பட போற என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் மற்றவாகள் காதுபட உங்களை திருப்பித் திட்டினாலும் திட்டுவான்
உன்னயெல்லாம் கீழ்பாக்கத்குத்தான்டா அனுப்பனும் என்று யாரையும் திட்ட
                                                               வேண்டாம்
நீயும் கூட வா என்று அவன் திருப்பி கூப்பிட்டால் நம்மால் போக முடியாது


நகைச்சுவை நேரம்


நண்பர் 1 : அங்க என்ன போலீஸ் செக்கிங்
நண்பர் 2 : DD ய புடிக்கிறாங்க
நண்பர் 1 : DD ய புடிக்கணும்னா VIJAY TV க்குத்தானே போகணும் கோயம்பேட்ல
         என்ன பண்றாங்க ?
நண்பர் 2 : DD ன்னா DRINK & DRIVE ன்னு அர்த்தம்டா முண்டம்
தேர்வில் கேள்வி : கீழ்கண்ட இந்திய வரைபடத்தில் மாநிலங்களை பிரித்து வண்ணம் தீட்டு
விடை தெரியாத மாணவணின் பதில்  : வெள்ளையனை போல் நாட்டை பிரித்து  சூழ்ச்சி செய்யும் எண்ணம் எனக்கு கிடையாது நான் இந்தியன்
நபர் 1 : சபாவில பாட்டு பாடிகிட்டு இருக்காறே அவருக்கு இரண்டு பொண்டாட்டி
நபர் 2 : ஓ அதனாலதான எல்லோரும் அவரை சங்கீதா கலா புருஷன் சொல்றாங்களா
மாப்பிள்ளை வீட்டார் : பொண்ண போட்டிருக்கிற டிரஸ்ஸோட அனுப்பி வெச்சிருங்க வேற ஒண்ணும் எங்களுக்கு  வேண்டாம். ஆனா ஒரு கன்டிஷன் உஙக பொண்ணு எங்க வீட்டுக்கு வந்த நாள் முதல் அவளுக்கு வயதாகி சாகுற வரைக்கும் அவ பேசுற மொபைலுக்கு நீங்கதான் ரீசார்ஜ் பண்ணணும்
பெண் வீட்டார் : இதுக்கு நீங்க டைரக்கடாவே உங்க சொத்து அத்தனையும் வித்து கொடுங்கன்னு கேட்டு இருக்கலாமே
தோழி 1 : என் கணவர் சின்ன சின்ன விஷயத்தை கேட்டா கூட கோபப்படுவாரு
தோழி 2 : என் கணவர் சின்ன வீட்ட பத்தி கேட்டா மட்டும்தான் கோபப்படுவாரு