Tuesday, 8 October 2013

சந்தானம் ஜோக்ஸ்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புது படத்தில் வில்லனும் சந்தானமும் சந்தித்து கொள்ளும் காட்சிகளில் வசனம் எப்படி இருக்கும் :
வில்லன் : உன்ன மாதிரி கத்து குட்டி கிட்டலாம் நான் பேச முடியாது
சந்தானம் : இரண்டு கேரளா குட்டிகள அனுப்பி வெக்கறேன் அது கூட பேசுரியா ?
வில்லன் : சிங்கத்த அதோட குகையிலயே சந்திக்க உனக்கு என்ன தைரியம் ?
சந்தானம் : சிங்கமா அசிங்கமா வாயில வந்துட போகுது என்னது குகையா 24 டாஸ்மாக்லயே ஒக்காந்து தண்ணி போட்டுகிட்டு இருக்குற அதுக்குள்ள வர்றதுக்கு எதுக்குடா தைரியம் ?
வில்லன் : உனன காலி பண்ணாம விடமாட்டேன்
சந்தானம் : எனக்கு வேற வீட்ட நீயே பாத்து வெச்சிட்டு வந்து காலி பண்ணு
வில்லன் : டேய் அவன புடிங்கடா
சந்தானம் : ஆல் அல்ல கையிஸ் வெயிட் உங்க எல்லாத்துகும் குவாட்டர் வாங்கி இந்த பேகுல வெச்சிருக்கேன் இதை புடிங்க முதல்ல
அல்ல கைஸ் : தாங்ஸ் பா
வில்லன் : எங்க போனாலும் உன்ன சும்மா விடமாட்டன்டா
சந்தானம் : ஏன் நான் எங்க போனாலும் என் நெம்பருக்கு தீர தீர ரீசார்ஜ் பண்ணிவிடுவியா

Tuesday, 24 September 2013

தத்து பித்துவங்கள்

கட்டயில போரவனே என்று யாரையும் திட்ட வேண்டாம் ஏனென்றால் பெரும்பாலும் இப்பொழுது ஆம்புலன்ஸ்தான்
உன் தலையில இடி விழ என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் பெரும்பாலும் இடி டைரக்டாக தலைமேல் விழாது
உன் நெஞ்சுல இருக்கிற மஞ்சா சோத்த எடுத்துறுவண்டா என்று யாரையும் திட்ட வேண்டாம் சோறு வயிற்றுக்குள்தான் இருக்கும்
உனக்கெல்லாம் நல்ல சாவே வராது என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் சாவில் ஏது நல்லது
உனக்கு இனிமே ஏழரை தாண்டா என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் திட்டும்போது மணி 10.30 ஆக கூட இருக்கலாம்
ஏண்டா லேட்டு என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஒரு நாள் நீங்களும் லேட்டாக வரும் நாள் வரும்
மடப்பய மவனே என்று பையனை திட்ட வேண்டாம்
ஏனென்றால் முதல் சொல் உங்களையே குறிக்கும்
வாய மூடிகிட்டு சாப்பிடு என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் வாயை மூடினால் சாப்பிட முடியாது செஞ்ச சாப்பாடு வீணாகும்
நீயெல்லாம் எங்கடா உருப்பட போற என்று யாரையும் திட்ட வேண்டாம்
ஏனென்றால் மற்றவாகள் காதுபட உங்களை திருப்பித் திட்டினாலும் திட்டுவான்
உன்னயெல்லாம் கீழ்பாக்கத்குத்தான்டா அனுப்பனும் என்று யாரையும் திட்ட
                                                               வேண்டாம்
நீயும் கூட வா என்று அவன் திருப்பி கூப்பிட்டால் நம்மால் போக முடியாது


நகைச்சுவை நேரம்


நண்பர் 1 : அங்க என்ன போலீஸ் செக்கிங்
நண்பர் 2 : DD ய புடிக்கிறாங்க
நண்பர் 1 : DD ய புடிக்கணும்னா VIJAY TV க்குத்தானே போகணும் கோயம்பேட்ல
         என்ன பண்றாங்க ?
நண்பர் 2 : DD ன்னா DRINK & DRIVE ன்னு அர்த்தம்டா முண்டம்
தேர்வில் கேள்வி : கீழ்கண்ட இந்திய வரைபடத்தில் மாநிலங்களை பிரித்து வண்ணம் தீட்டு
விடை தெரியாத மாணவணின் பதில்  : வெள்ளையனை போல் நாட்டை பிரித்து  சூழ்ச்சி செய்யும் எண்ணம் எனக்கு கிடையாது நான் இந்தியன்
நபர் 1 : சபாவில பாட்டு பாடிகிட்டு இருக்காறே அவருக்கு இரண்டு பொண்டாட்டி
நபர் 2 : ஓ அதனாலதான எல்லோரும் அவரை சங்கீதா கலா புருஷன் சொல்றாங்களா
மாப்பிள்ளை வீட்டார் : பொண்ண போட்டிருக்கிற டிரஸ்ஸோட அனுப்பி வெச்சிருங்க வேற ஒண்ணும் எங்களுக்கு  வேண்டாம். ஆனா ஒரு கன்டிஷன் உஙக பொண்ணு எங்க வீட்டுக்கு வந்த நாள் முதல் அவளுக்கு வயதாகி சாகுற வரைக்கும் அவ பேசுற மொபைலுக்கு நீங்கதான் ரீசார்ஜ் பண்ணணும்
பெண் வீட்டார் : இதுக்கு நீங்க டைரக்கடாவே உங்க சொத்து அத்தனையும் வித்து கொடுங்கன்னு கேட்டு இருக்கலாமே
தோழி 1 : என் கணவர் சின்ன சின்ன விஷயத்தை கேட்டா கூட கோபப்படுவாரு
தோழி 2 : என் கணவர் சின்ன வீட்ட பத்தி கேட்டா மட்டும்தான் கோபப்படுவாரு


Monday, 23 September 2013

உணவு கூட ஜீரணம் ஆகிவிடும் ஆனால் விலை ?

   சேலத்தில் மட்டுமல்ல எங்கள் ஊா் குமாரபாளையத்திலும்  அனைத்து ஓட்டல்களிலும் விலையேற்றி விட்டாா்கள். இட்லி 5 யிலிருந்து 6 க்கும் புரோட்டா 7 லிருந்து 8 க்கும்  கல் தோசை 7 லிருந்து 8 க்கும் ஆம்லெட் 10 லிருந்து 12 க்கும் மற்றும் இதே போல் அனைத்து அய்யடத்திற்கும் 1 முதல் 4 ரூ வரை ஏற்றியிருக்கிறாா்கள். ஒருவா் சாப்பிட போனால் ரூ 50 ரூ ஆகிவிடுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் எக்ரைஸ் ரூ 30 ரூ க்கு போட்டுத் தருகிறாா்கள் அது ஒன்று சாப்பிட்டாலே வளிறு நிறைந்து விடுகிறது. வீட்டிற்கு பாா்சல் வாங்கி வந்தால் இருவா் பகிா்ந்து உண்ணலாம் அவா்கள் தரும் குழம்பில் ஆளுக்கு இரண்டு தோசை சுட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். மதிய உணவு எங்கள் ஊாில் செல்வா மெஸ் என்று ஒரு கடை உண்டு அதில் முழு சாப்பாடு ஒரு அப்பளம் கூட்டு பொறியல் மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு மீன் குழம்பு சாம்பாா் ரசம் மோா் அனைத்தும் சோா்ந்து ரூ 45 மட்டுமே. சாப்பாட்டை கேட்டு வைப்பாா்கள் .எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம் முகம் சுளிக்க மாட்டாா்கள்.

Sunday, 22 September 2013

THE CONJURING ( சினிமா விமா்சனம் )



இந்த வாரம் ரிலீஸ் ஆன 6 மெழுகுவத்திகள்,யா யா, இந்த இரண்டு படங்களையும் மிஞ்சி விடும் போலருக்கிறது கன்ஜூரிங் பேய் படம் நேற்றிரவு குமாரபாளையம் சரஸ்வதியில் பைக் பாஸ் போட கூட இடமில்லாமல் மெயின் கேட் வழியாக பாஸ் போட்டார்கள். உள்ளே சென்று பார்த்தால் காலண்டு பரீட்சை லீவ் என்பதாலா அல்லது படத்தை பற்றி கேள்விப்பட்டு வந்தார்களா ? என்று தெரியவில்லை பத்துக்கும் மேற்பட்ட தாய் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. படம் ஹவுஸ்புல் கண்டிப்பாக இன்று சண்டே அன்று எக்ஸ்ட்ரா சேர் போட்டுத்தான் சமாளிப்பார்கள். இராமநாராயணன் சார் எப்படி இந்த படத்தின் டப்பிங் உரிமையை வாங்காமல் விட்டார்.பாக்ஸ் ஆபிஸ் ஹிட் நிச்சயம் இந்தப் படம் அடிக்கும். கதை என்று பார்த்தால் எல்லா பேய் படங்களில் வருவது போல் காட்டில இருக்கும் தனி வீடு அதை விலைக்கு வாங்கி குடிபோகும் குடும்பம். வீட்டில் உள்ள பேயிடம் சிக்கி என்ன ஆகிறார்கள் என்பதுதான். ஆனால் திரைக்கதையிலும் எடுத்த விதத்திலும் நம்மையும் அந்த பேயிடம் சிக்க வைத்து காட்டு காட்டு என்று காட்டுகிறார். படத்தில் வரும் தம்பதியனருக்கு 4 வயது முதல் 16 வயது வரை உள்ள 6 குழந்தைகள். பேய் தன் ஆட்டத்தை குழந்தைகளிடமே முதலில் ஆரம்பிக்கிறது. தூங்கி கொண்டிருக்கும் சிறுமியின் காலை லேசாக் இழுப்பது சிறுமி ப்க்கத்தில் படுத்திருக்கும் தன் சகோதரிதான் விளையாடுகிறாள் என்று நினைத்துக்கொண்டு 'எனக்கு தூக்கம் வருகிறது விளையாடாமா கம்முன்னு தூங்கு ' என்று சொன்ன உடன் மீண்டும் பேய் அந்த சிறுமியின் காலை பலமாக இழுத்தவுடன் அந்த சிறுமி திழுக்கிட்டு எழுந்து தூங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதரியை பாத்துவிட்டு 'யாரு யாரு என் காலை புடிச்சி இழுத்ததுன்னு சொல்லி கட்டிலுக்கு கீழ் யாராது இருக்கிறார்களா என்று குனிந்து பார்க்கும்பொழுது அவளுடன் சேர்ந்து கேமரா கோணமும் தலை கீழாக பார்க்கும்பொழுது பேயின் உருவம் தெரிவது வாங் செம சாட். ப்க்கத்திலிருக்கும் நபர் பயத்தில் கத்தி விட்டார். இது போன்ற ஒரு அனுபவம் சிறுமியின் தாய்க்கு ஏற்படும்பொழுதுதான் வீட்டில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று உணர்ந்து பேயோட்டும் தம்பதிகளான ஹீரோ ஹீரோயினின் உதவியை நாடுகிறாள். இவர்கள் வந்தவுடன் படம் ஜெட் வேகத்தில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறது. அந்த வீட்டிற்கு வரும் அவர்கள் வந்தவுடனேயே அந்த வீட்டில் பேய் இருப்பதை உணர்கிறார்கள். உடனே தங்கள் குழுவில உள்ள மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த வீட்டிற்கு அன்று இரவே வருகிறார்கள்.வீட்டின் அனைத்து இடங்களிலும் கேமராவை பொறுத்தி பேயின் நடமாட்டத்தை படம் பிடிக்க முனைகிறார்கள். பேயிடம் தனியாக மாட்டும் ஹீரோயின் பேயின் நோக்கத்தை அறிகிறாள். அதாவது பேயாக வலம் இந்த வீட்டின் சொந்தக்காரி சூனியக்காரி ஆகி இந்த உலகத்தையே ஆள வேண்டும் என்ற ஆசையில் தான் பெற்ற குழந்தையையே ஏழு வயதில் கொன்று புதைத்து விடுறாள் விஷயம் வெளியில் தெரிந்தவுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அதன் பின் யார் இந்த வீட்டிற்கு வந்தாலும் அவர்களை பேயாக இருக்கும் இவள் சும்மா விடுவதில்லை. அதே போல் இந்த குடும்பத்திலிருப்பவர்களையும் கொல்ல அலைகிறாள். கேமராவில் பதிவாகியிருக்கும் ஆதாரங்களை வைத்து சர்ச் பாதிரியாரை ஒப்புதல் பெற்று அவரை அழைத்து வந்து பேய் ஒட்ட வைக்க முயல்கிறார்கள். இதை அறிந்து கொண்ட பேய் தன் உச்ச கட்ட தாண்டவத்தை ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் அம்மாவின் உடலில் பேய் புகுந்து கொள்கிறது. பேய் ஓட்டும் தம்பதிகளின் வீட்டில் புகுந்து அவர்களின் மகளையும் கொல்லப் பார்க்கிறது. இப்போது கிளைமாக்ஸில் பேய் பிடித்த தாயே தன் இரு குழந்தைகளை கொல்ல எடுத்து செல்கிறாள். தந்தை இந்த விஷயத்தை பேயோட்டும் தம்பதிகளுக்கு போன் மூலம் தெரிவித்து அவர்களை உடனே தன் வீட்டிற்கு வருமாறு அழைக்கிறான். தன் குழுவோடு அங்க விரையும் பேய் ஓட்டும் ஹுரோ ஹுரோயின் தம்பதிகள் பேயுடன் நடத்தும் உச்ச கட்ட போராட்டம் பார்க்கும் நம் அனைவரையும் சீட்டின் நுனிக்கே கொண்டு செல்கிறது. படத்தில் சிறு ஆபாச காட்சிகளோ கோரமான காட்சிளோ உயிர் பலியோ இல்லாமல் கடைசி வரை நம்மை கட்டிப்போட வைக்கும் திரைக்கதைதான் படத்தின் பலம். அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து பயந்து விட்டு வர வாழ்த்துக்கள்...

புரட்டாசி சைவத்தின் ஆட்சி

காளான் கடையில் இன்னும் காளான் வரவில்லை

மீன் கடையில் மீன் வந்தும் வாங்க ஆளில்லை

கோழிகடையிலும் கூட்டம் இல்லை

Saturday, 21 September 2013

6 மெழுகுவத்திகள் விமாசனம்


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தமழ் சினிமா. மகளையோ மகனையோ யாரவது கடத்திவிட அவாகளை காப்பாற்ற கிளம்பும் ஹாலிவுட் அப்பா ஹீரோ போன்ற கதைதான் ஆனால் அதில் மிதமிஞ்சிய ஹீரோயிசம் மட்டுமே மிஞ்சியிருக்கும். ஆனால் இந்த படத்தில் தன் மகனை தொலைத்த விட்டு தேடும் ஹீரோவிடம் காண்பது பாசத்தின் வலி மட்டுமே.  ஷாமும் பூனம் கவுரும் தங்கள் ஒரே மகன்தான் தங்கள் உலகம் என்று வாழ்ந்து வரும் சாப்ட்வேர் தம்பதிகள். முதலில் வரும் ஒரு பாடலிலேயே ஷாம் தன் மகன் மீது வைத்திருக்கும் அன்பினை அழகான ஹைக்கூ போல் காட்டி விடுகிறார்கள். மகனின் 6 வது பிறந்தநாளில் நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து 6 எண்ணுள்ள மெழுகுவத்தியை ஏத்தி கொண்டாடிவிட்டு மாலையில் பீச்சிற்கு சென்று குழந்தையுடன் விளையாடிவிட்டு வரும் பொழுது கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் தொலைந்து போகிறான். ஷாமும் அவரது மனைவியும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பித்து பிடித்த்து போல் 'கௌதம் கௌதம் ' என்று கத்திக் கொண்டே பீச் முழுவதும் தேடுகிறாகள். அவாகளின் நிலையை பாத்த ஒருவர் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கம்ப்ளெய்ண்ட் ஒன்றை தரச் செய்கிறார்  கம்ப்ளெய்ண்ட் பெற்ற ஏட்டு ஏதாவது தகவல் கிடைத்தால் அழைப்பதாக சொல்லி அனுப்பி வைக்கிறா. வீட்டிற்கு வந்து இருவரும் அழுது கொண்டே கழித்து விட்டு காலையில் சென்று இன்ஸ்பெக்டரை  காணும்பொழுது இவர்களின் நிலையை கண்ட அவா ஒரு கான்ஸ்டபுளை அழைத்து ஒரு குறிப்பிட்ட ஒரு ஆளை சென்று காண அழைத்து செல்ல சொல்கிறார். இந்த இடத்திலுருந்துதான் குழந்தை கடத்தலின் வேறு ஒரு உலகத்தை காண நம் மனதை கல்லாக்கி கொண்டு பயணப்பட வேண்டும். இவாகள் சென்று காண்பது ஒரு ஊனமுற்ற பிச்சைகாரனை அவன் தனக்கொன்றும் இதை பற்றி தெரியாது என்று சொல்லி நழுவப் பார்க்கிறான். பூனம் கவுர் அவன் காலை பிடித்து கதறும்பொழுது மனமிறங்கி நகரிக்கு சென்று கிருஷ்ணாராவ் என்பவனை பார்க்க சொல்கிறான். அடுத்து ஹுரோ தன் நண்பர்களுடன் நகரிக்கு பயணப்படுகிறான். அங்கு சென்று இவர்கள் பார்க்கும் கிருஷ்ணா ராவ் பெண்களை வைத்து தொழில் செய்யும் ஓரு பிம்ப். தனக்கொன்றும் தெரியாது என்றும் என் இடத்தை விட்டு போகவாவிட்டால் அனைவரையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று மிரட்டுகிறான். மீண்டும் மனமுடைந்த ஷாம் மற்றும் திரும்ப சென்னைக்கே வருகிறார்கள். ஷாம் ஒரு முடிவுடன் தனி ஆளாக கிளம்பி மகனுடன் தான் வீட்டிற்கு வருவேன் அதுவரை ஜாக்கிரதையாக இருக்குமாறு மனைவியிடம் சொல்லி விட்டு கிளம்புகிறார். ஒரு டாக்ஸி டிரைவர் இவருக்கு உதவ முன் வருகிறார். முன்பொருமுறை பிச்சைகாரனுடன் சேர்த்து ஒரு ஆந்திராகாரனை பார்த்ததாகவும் அவரை ஆந்திரா வரை சென்று தன் காரில் விட்டு வந்ததாகவும் சொல்லி அந்த நபரை பார்க்க இருவரும் மீண்டும் ஆந்திரா செல்கிறார்கள். அந்த நபர் தனககொன்றும் தெரியாது எனவும் சென்னை வந்தால் பெண்கள் விஷயமாகத்தான் பிச்சைகாரனை பார்ப்பேன் என்றும் இதை தவிர வேறு ஒன்றும் தெரியாது எனவும் தன் பேரக் குழந்தையின் தலை மீது கை வைத்து சத்தியம் செய்கிறான். இதை நம்பி கிளம்ப தயாரான ஷாம் நொடிப் பொழுதில் அவன் பொய் சொல்கிறான் என்பதை அறிந்து கொண்ட ஷாம் அவன் பேரக் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவனிடம் உண்மையை வரவழைக்கிறான். அவன் கரீம் நகரில் இருக்கும் ஒருவனுக்கு போன் செய்து சென்னை பையனை பற்றி கேட்க அவன் குறிப்பாக சென்னை பையனை பற்றி ஏன் கேட்கிறாய் என்று சந்தேகப்பட்டு போனை கட் செய்து விடுகிறான். அவன் ஷாமிடம் உன் பையனை போலீஸ் தேடுகிறது என் தவறாக நினைத்து விட்டான்.இனி அவன் உன் குழந்தையை கொன்று விடுவான் சீக்கிரம் அங்க சென்று உன் குழந்தையை காப்பாற்று என்று கூறுகிறான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பும் சமயத்தில் ஷாம் தான் கத்தியை வைத்து மிரட்டிய அவனின் பேரக் குழந்தையிடம் மன்னிப்பு கேட்பது மனிதநேயத்தின் உச்சம். கரீம்நகர் மாட்டுச்சந்தையில் இருப்பவனை பார்த்து மகனை பற்றி கேட்கும் ஷாமிடம் உன் மகனை கொன்று மூட்டை கட்டி வைத்திருக்கிறேன் போய் பார் என்கிறான் பதறிப்போன ஷாம் அங்கிருக்கும் ஒரு மூட்டையில் ஒரு சிறுவனின் கால் மட்டும் தெரிவதை பார்த்து அதனை தொட்டு கதறும் இடம் கண்ணீரை வரவழைக்கும்.அங்கிருக்கும் ரவுடி இவரை கொலை செய்ய தாக்குதல் நடத்த அவனை கொல்கிறார் ஷாம் அவன் இறக்கும் தருவாயில் போபாலில் இருக்கும் திவாகர்  ( அனில் முரளி) என்பவனை முடிந்தால் போய் பார் அவனுக்கு தெரியும் உன் குழந்தையை பற்றி என்று கூறுகிறான். போபாலுக்கு ஷாமும் டிரைவரும் சென்று திருநங்கை போல் இருக்கும் ஒருவனை பார்கிறார்கள் அவன் அவர்களை திவாகரை பார்க்க அழைத்து செல்கிறேன் என்று கூறி ஒரு மொட்டை தலையனிடம் அழைத்து செல்கிறான். அவன் இவர்களிடம் ஒரு கோடி பணம் கேட்கிறான் பையனை விடுவிக்க அப்படி இப்படி பேசி கடைசயில் ரூ 50 இலட்சம் தந்தால் குழந்தையை விட்டு விடுவதற்கு சம்மதிக்கிறான். ஷாம் சென்றவுடன் அந்த திருநங்கை போல் பேசும் நபர் மொட்டை நபரை பொளேரென அடித்து ' இந்த திவாகர் சொன்னத மட்டும் சொன்னா போதும் நீயா எந்த முடிவும் எடுக்க கூடாது ' என்று சொல்கிறார். இவர்தான் படத்தின் மெயின் வில்லன் என்று நமக்கு தெரிய வருகிறது.ஷாம் தன் மனைவியிடம் போன் செய்து கம்பெனியில் லோன் கேட்டாவது அல்லது வீட்டை விற்றாவது தான் சொல்லும் வங்கி கணக்கிற்கு ரூ 50 இலட்சம் பணபரிமாற்றம் செய்ய சொல்லுகிறார். அவரது மனைவியும் ஷாம் சொன்ன படி செய்து பண பரிமாற்றம் செய்கிறார். ஆனால் அதற்குள் வில்லனிடம் அடைபட்டிருக்கும் ஒரு ஸகூல் யூனிபார்ம் அணிந்த மாணவி ஷாமின் காலை பிடித்து தன்னை கர்பாற்ற சொல்லி கதறுகிறாள். அவளை காப்பாற்ற மறுக்கும் ஷாம் பின் தன் மகனை நினைத்து ஒரு கணம் மறந்து அந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்றி அங்கிருந்து தப்பி அந்த மாணவியை பத்திரமாக ஒரு இடத்தில் சோத்து விட்டு திரும்ப வந்து பார்க்கும்பொழுது அங்கிருந்த வில்லன் கூட்டம் அந்த இடத்தை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு தப்பி விடுகிறது. அங்கு தன் மகனினன் சட்டையை பார்க்கும் ஷாம் தன் மகன் அருகிலேயே இருந்தும் கோட்டை விட்டு விட்டோமே என்று கதறுகிறார். அந்த நேரம் மனைவி போன் செய்து தான் பணம் பறிமாற்றம் செய்த விஷயத்தை கூறுகிறார். பணமும் போய் பையனும் போய் ஷாமின் நிலமை மிகவும் பரிதாபமாக ஆகிவிடுகிறது. அங்கிருக்கும் மொபலை எடுத்து வில்லன் திவாகரை தொடர்பு கொண்டு பேசும்பொழுது ' உன் மகனை மீட்க கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நீயாக கெடுத்து கொண்டாய் இனி உன் மகனை நீ எங்கு தேடினாலும் கிடைக்கா மாட்டான் அவன் அலகாபாத்லயோ,பம்பாய்லயோ,கொல்கத்தாவிலயோ பிச்சை எடுத்துக்கிட்டிருப்பான் முடிஞ்சா கண்டுபிடி ' என்று ஏளனம் செய்கிறான். அதன் பின்னர் ஷாம் ஒரு பிச்சைகாரனை போல் ஊர் ஊராக தன் மகனை தேடி அழைகிறான். ஒரு நாள் தன் மனைவியிடம் பப்ளிக் போனிலிருந்து பேசுகிறான் எதிர் முனையில் ஷாமின் மனைவி 'எங்கடா இருக்க சீக்கிரம் வாடா என்க்கு தனியா இருந்து பைத்தியமே பிடிச்சிரும் போல இருக்கு உனக்கு எத்தனை குழந்தை வேணும் நான் பெத்து தரேன்  நீ வந்துட்றா ' என்று சொல்லி அழும் இடத்தில் காமத்தை மீறி கணவனின் மீதுள்ள காதல்தான் வெளிப்படுகிறது. கடைசியாக கொல்கத்தாவில் தெருவோரம் கண்கள் வீங்கி அநாதையாக கிடக்கும் ஷாமை ஒரு தமிழ் பேசும் பெரிவர் காப்பாற்றி அடைக்கலம் தருகிறார். அவருடன் சேர்ந்து சிறுவனை தேடும் ஷாம் குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கும்பலை சந்திக்கிறான்.அவர்களிடம் உள்ள குழந்தைகளை காட்ட சொல்கிறான். அவர்கள் காட்ட முடியாது என்று மறுப்பதுடன் போபாலில் இருக்கும் சுதாகரை போய் பார் அவன் குழந்தை கடத்துவதில் எல்லோருக்கும் கிங் என்று சொல்கிறான். ஆனால் அவனை ஏற்கனவே தான் கொன்று விட்டதாக கூறும் ஷாம் ' என்னை மாதிரி பிள்ளைய  தொலைச்ச அப்பனுங்க ஒவ்வொருவரும் உங்களை மாதிரி குழந்தைகளை கடத்துற நாலு பேரையாவது கொன்னாதாண்டா நீங்க திருந்துவீங்க ' என்று அவர்களிடம் சொன்னவுடன் பயந்து போன் அவர்கள் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கின்றனர். அங்கு இருக்கும் குழந்தைகள் ஷாமை பார்த்தவுடன் தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி கதறுகிறார்கள் அதில் ஷாமின் மகனும் அவரின் காலை பிடித்து கதறுவது ஷாமிற்குத் தெரியாமல் போகிறது. ஏனென்றால் அவன் தலைமுடியை சுரண்டி எடுத்து கண்ணோரத்தில் அடிபட்டு கண்ணாடி போட்டுக் கொண்டு அடையாளமே தெரியாமல் இருக்கிறான். ஷாமும் தாடியுடன் இருப்பதால் அந்த பையனுக்கும் தன் அப்பாவை அடையாளம் தெரியவில்லை. ஷாம் அழுது கொண்டே அந்த முஸலீம் பெரியவரிடம் ' என் மகன் இங்கு இல்லை' என்று கூறிவிட்டு அந்த இடத்தை செல்ல முற்படுகிறார். படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் மனப் பதைப்புடனும் கண்ணீர் மல்க காத்துக்கொண்டிருக்க அப்போது ஷாம் தன் மகனின் சட்டை தன் பையில் இல்லாதது கண்டு அதை உள்ளே கிடக்கிறதா என்று பார்க்க செல்கிறார். அதே சமயம் அந்த பையன் அங்கு கிடக்கும் தன் சட்டையை எடுத்து பார்த்து கொண்டிருக்கிறான் . அதை பார்த்த ஷாம் அந்த பையனின் பின்புறமாக கையை வைத்து அந்த சட்டையை இழுக்க அந்த பையன் திரும்பாமலேயே முன்புறமாக இழுக்க அவன் தோளை தொட்டு திருப்பி ஷாம் பார்க்கும்பொழுது தன் மகன் தான் என்று அடையாளம் கொண்டு வாரி அனைத்து முத்தமிடுகிறார்.' டேய் அப்பாடா என்ன பார்றா  என்று சொன்னவுடன் பையன் ' எனக்கு தெரியும்பா நீ எப்படியும் வந்து கூட்டிகிட்டு போயிடுவன்னு ஏம்பா இத்தனை நாளா வரல என் மண்டையில அடிச்சதுல கண்ணு கூட சரியா தெரியலப்பா ' என்று பையன் அழுவும்போது நமது கண்களிலும் கண்ணீர் வந்து முட்டுகிறது. தியேட்டரே எழுந்து நின்று கைத்தட்டுகிறது எழுத்தும்,ஆக்கமும் V.Z.துரை என்று திரையில் ஓடும்பொழுது

Friday, 20 September 2013

மூடா் கூடம் விமா்சனம்

மூடா் கூடம் விமா்சனம்

நவீன் டைரக்டா் பேரு சும்மா இருப்பாரா போ்லயே நவீனம் வச்சிருக்குறவரு படத்துல வெக்காம இருப்பாரா நவீன தமிழ் சினிமாவை தந்திருக்கிறாா் .
படம் ஆரம்பத்திலேயே மண்டையை கழட்டி தனியே வைத்து விட வேண்டும். 
 பாாத்தாலே கிறுக்கன் மாதிாி இருக்கிறாா் ஆனால் கிறுக்கன் என்று சொன்னால் அடிக்க பாய்கிற ஒருவா்
மற்றொருவா் கஞ்சா விற்று பிழைப்பு நடத்துபவா்
அப்பாவின் நண்பாிடம்  வேலை கேட்டு கிராமத்திலிருந்து வருபவா்
சீா்திருத்த பள்ளியில் படித்ததால் வேலை கிடைக்காமல் அலைபவா்
இந்த நால்வரும் சோ்ந்து ஒரு வீட்டில் நுழைந்து அங்கிருப்பவா்களை ஒரு ரூமில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறாா்கள். அவா்களுக்கு பணம் கிடைத்ததா ? நமக்கு டவுசா் கழண்டதா ? என்பதை பக்கத்து காலி சீட்டை பிச்சி எாியாமல் பொறுமையிருந்தால் பாா்த்து தொிந்து கொள்ளவும்