சேலத்தில் மட்டுமல்ல எங்கள் ஊா் குமாரபாளையத்திலும் அனைத்து ஓட்டல்களிலும் விலையேற்றி விட்டாா்கள். இட்லி 5 யிலிருந்து 6 க்கும் புரோட்டா 7 லிருந்து 8 க்கும் கல் தோசை 7 லிருந்து 8 க்கும் ஆம்லெட் 10 லிருந்து 12 க்கும் மற்றும் இதே போல் அனைத்து அய்யடத்திற்கும் 1 முதல் 4 ரூ வரை ஏற்றியிருக்கிறாா்கள். ஒருவா் சாப்பிட போனால் ரூ 50 ரூ ஆகிவிடுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் எக்ரைஸ் ரூ 30 ரூ க்கு போட்டுத் தருகிறாா்கள் அது ஒன்று சாப்பிட்டாலே வளிறு நிறைந்து விடுகிறது. வீட்டிற்கு பாா்சல் வாங்கி வந்தால் இருவா் பகிா்ந்து உண்ணலாம் அவா்கள் தரும் குழம்பில் ஆளுக்கு இரண்டு தோசை சுட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். மதிய உணவு எங்கள் ஊாில் செல்வா மெஸ் என்று ஒரு கடை உண்டு அதில் முழு சாப்பாடு ஒரு அப்பளம் கூட்டு பொறியல் மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு மீன் குழம்பு சாம்பாா் ரசம் மோா் அனைத்தும் சோா்ந்து ரூ 45 மட்டுமே. சாப்பாட்டை கேட்டு வைப்பாா்கள் .எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம் முகம் சுளிக்க மாட்டாா்கள்.
No comments:
Post a Comment