இந்த வாரம் ரிலீஸ் ஆன 6 மெழுகுவத்திகள்,யா யா, இந்த இரண்டு படங்களையும் மிஞ்சி விடும் போலருக்கிறது
கன்ஜூரிங் பேய் படம் நேற்றிரவு குமாரபாளையம் சரஸ்வதியில் பைக் பாஸ் போட கூட
இடமில்லாமல் மெயின் கேட் வழியாக பாஸ் போட்டார்கள். உள்ளே சென்று பார்த்தால்
காலண்டு பரீட்சை லீவ் என்பதாலா அல்லது படத்தை பற்றி கேள்விப்பட்டு வந்தார்களா ?
என்று தெரியவில்லை
பத்துக்கும் மேற்பட்ட தாய் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தது எனக்கு
ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. படம் ஹவுஸ்புல் கண்டிப்பாக இன்று சண்டே அன்று
எக்ஸ்ட்ரா சேர் போட்டுத்தான் சமாளிப்பார்கள். இராமநாராயணன் சார் எப்படி இந்த
படத்தின் டப்பிங் உரிமையை வாங்காமல் விட்டார்.பாக்ஸ் ஆபிஸ் ஹிட் நிச்சயம் இந்தப்
படம் அடிக்கும். கதை என்று பார்த்தால் எல்லா பேய் படங்களில் வருவது போல் காட்டில
இருக்கும் தனி வீடு அதை விலைக்கு வாங்கி குடிபோகும் குடும்பம். வீட்டில் உள்ள
பேயிடம் சிக்கி என்ன ஆகிறார்கள் என்பதுதான். ஆனால் திரைக்கதையிலும் எடுத்த
விதத்திலும் நம்மையும் அந்த பேயிடம் சிக்க வைத்து காட்டு காட்டு என்று காட்டுகிறார்.
படத்தில் வரும் தம்பதியனருக்கு 4
வயது முதல் 16 வயது வரை உள்ள 6 குழந்தைகள்.
பேய் தன் ஆட்டத்தை குழந்தைகளிடமே முதலில் ஆரம்பிக்கிறது. தூங்கி கொண்டிருக்கும்
சிறுமியின் காலை லேசாக் இழுப்பது சிறுமி ப்க்கத்தில் படுத்திருக்கும் தன்
சகோதரிதான் விளையாடுகிறாள் என்று நினைத்துக்கொண்டு 'எனக்கு
தூக்கம் வருகிறது விளையாடாமா கம்முன்னு தூங்கு ' என்று
சொன்ன உடன் மீண்டும் பேய் அந்த சிறுமியின் காலை பலமாக இழுத்தவுடன் அந்த சிறுமி
திழுக்கிட்டு எழுந்து தூங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதரியை பாத்துவிட்டு 'யாரு யாரு என் காலை புடிச்சி இழுத்ததுன்னு சொல்லி
கட்டிலுக்கு கீழ் யாராது இருக்கிறார்களா என்று குனிந்து பார்க்கும்பொழுது அவளுடன்
சேர்ந்து கேமரா கோணமும் தலை கீழாக பார்க்கும்பொழுது பேயின் உருவம் தெரிவது வாங்
செம சாட். ப்க்கத்திலிருக்கும் நபர் பயத்தில் கத்தி விட்டார். இது போன்ற ஒரு
அனுபவம் சிறுமியின் தாய்க்கு ஏற்படும்பொழுதுதான் வீட்டில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று உணர்ந்து
பேயோட்டும் தம்பதிகளான ஹீரோ ஹீரோயினின் உதவியை நாடுகிறாள். இவர்கள் வந்தவுடன் படம்
ஜெட் வேகத்தில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறது. அந்த வீட்டிற்கு வரும் அவர்கள்
வந்தவுடனேயே அந்த வீட்டில் பேய் இருப்பதை உணர்கிறார்கள். உடனே தங்கள் குழுவில உள்ள
மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த வீட்டிற்கு அன்று இரவே வருகிறார்கள்.வீட்டின்
அனைத்து இடங்களிலும் கேமராவை பொறுத்தி பேயின் நடமாட்டத்தை படம் பிடிக்க
முனைகிறார்கள். பேயிடம் தனியாக மாட்டும் ஹீரோயின் பேயின் நோக்கத்தை அறிகிறாள்.
அதாவது பேயாக வலம் இந்த வீட்டின் சொந்தக்காரி சூனியக்காரி ஆகி இந்த உலகத்தையே ஆள
வேண்டும் என்ற ஆசையில் தான் பெற்ற குழந்தையையே ஏழு வயதில் கொன்று புதைத்து
விடுறாள் விஷயம் வெளியில் தெரிந்தவுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொள்கிறாள். அதன் பின் யார் இந்த வீட்டிற்கு வந்தாலும் அவர்களை பேயாக இருக்கும் இவள்
சும்மா விடுவதில்லை. அதே போல் இந்த குடும்பத்திலிருப்பவர்களையும் கொல்ல அலைகிறாள்.
கேமராவில் பதிவாகியிருக்கும்
ஆதாரங்களை வைத்து சர்ச் பாதிரியாரை ஒப்புதல் பெற்று அவரை அழைத்து வந்து பேய் ஒட்ட வைக்க
முயல்கிறார்கள். இதை அறிந்து கொண்ட பேய் தன் உச்ச கட்ட தாண்டவத்தை ஆரம்பிக்கிறது.
குழந்தைகளின் அம்மாவின் உடலில் பேய் புகுந்து கொள்கிறது. பேய் ஓட்டும் தம்பதிகளின்
வீட்டில் புகுந்து அவர்களின் மகளையும் கொல்லப் பார்க்கிறது. இப்போது கிளைமாக்ஸில்
பேய் பிடித்த தாயே தன் இரு குழந்தைகளை கொல்ல எடுத்து செல்கிறாள். தந்தை இந்த
விஷயத்தை பேயோட்டும் தம்பதிகளுக்கு போன் மூலம் தெரிவித்து அவர்களை உடனே தன்
வீட்டிற்கு வருமாறு அழைக்கிறான். தன் குழுவோடு அங்க விரையும் பேய் ஓட்டும் ஹுரோ
ஹுரோயின் தம்பதிகள் பேயுடன் நடத்தும் உச்ச கட்ட போராட்டம் பார்க்கும் நம்
அனைவரையும் சீட்டின் நுனிக்கே கொண்டு செல்கிறது. படத்தில் சிறு ஆபாச காட்சிகளோ
கோரமான காட்சிளோ உயிர் பலியோ இல்லாமல் கடைசி வரை நம்மை கட்டிப்போட வைக்கும்
திரைக்கதைதான் படத்தின் பலம். அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து பயந்து
விட்டு வர வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment